இணையத்தை கலக்கும் நீல நிற பாம்பு; அழகை போன்றே ஆபத்தும் நிறைந்தது

தினமலர்  தினமலர்
இணையத்தை கலக்கும் நீல நிற பாம்பு; அழகை போன்றே ஆபத்தும் நிறைந்தது

மாஸ்கோ : பாம்பு வகைகளில் அரிதானதும், கொடிய விஷம் கொண்டதுமான நீல விரியன் பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

நீல விரியன் பாம்பு பார்பதற்கு பிரகாசமாக, அழகாக இருந்தாலும் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷம் கடுமையான இரத்தப்போக்கை உடலின் உள்ளும், வெளியேயும் ஏற்படுத்தும். வெள்ளை உதடு கொண்ட விரியன் பாம்புகள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கும்.

இதில் நீல வகை என்பது மிகவும் அரிதானது. கிழக்கு தைமூர் மற்றும் இந்தோனேசியா போன்ற தீவு பகுதிகளில் இவை அதிகம் காணப்படுவதாக மாஸ்கோ உயிரியல் பூங்கா கூறியுள்ளது. பாலி தீவில் அதிகம் பேர் இந்த பாம்பிடம் கடி படுகிறார்கள். இதனால் அரிதாகவே இறப்பு நிகழும் என்றாலும், ரத்தக்கசிவு கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.


இந்த நிலையில் தான் ஒருவர் ரோஜா செடியின் மீது அமர்ந்திருந்த இந்த நீல விரியன் பாம்பை, செடியோடு கையில் பிடித்து அதை வீடியோ எடுத்துள்ளார். ரெட்டிட் இணையதளத்தில் இதனை 22 லட்சம் பேர் பார்த்துள்ளனர். டுவிட்டர், பேஸ்புக்கிலும் இது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதன் விஷத்தன்மை அறியாமல் அழகாக இருக்கிறது என கருத்து கூறியுள்ளனர். சிலர் இப்பாம்பிடமிருந்து தள்ளியிருப்பது அவசியம் என எச்சரித்துள்ளனர்.

மூலக்கதை