கொரோனா கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகளை வறுமையில் தள்ளுகிறது : யுனிசெப்

தினமலர்  தினமலர்
கொரோனா கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகளை வறுமையில் தள்ளுகிறது : யுனிசெப்

ஐக்கிய நாடுகள் சபை : கொரோனா தொற்றுநோயால் பல பரிமாண வறுமையில் ( Multi-dimensional Poverty ) வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 1.2 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று யுனிசெப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று நோயால் உலகளவில் கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகள் வறுமையில் மூழ்கியுள்ளனர். இது உலகெங்கிலும் பல பரிமாணங்களால், வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கையை சுமார் 1.2 பில்லியனாகக் கொண்டுள்ளது என்று யுனிசெப் தெரிவிக்கிறது.


இது குறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா போர் கூறுகையில், கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான குழந்தைகளை வறுமையில் தள்ளியுள்ளன. என கூறினார்.

மூலக்கதை