மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தினகரன்  தினகரன்
மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு விரோதமானது என்று கருதி வேளாண் மசோதாக்களை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி எதிர்த்துள்ளது. பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதள அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவோ விவசாயிகள் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு மகிழ்ச்சியுடன் ஆதரவு அளித்துள்ளது. விவசாய விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைக்க வழிவகுப்பது அத்தியாவசிய பொருள் சட்டம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை