தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்க : தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்!!

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்க : தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்!!

டெல்லி:  தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று தி.மு.க., வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சனை ஒன்றை  தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா எழுப்பினார். அதாவது மத்திய அரசு பணிகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் வெளியாக மத்திய அரசு துறை பணிகளில் மிக சிலரே தமிழகத்திலிருந்து நிரப்பப்பட்டதாக திருச்சி சிவா கூறினார். எனவே மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று மாநிலங்களவையில் தி.மு.க., எம்.பி சிவா கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் 84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளதாக திருச்சி சிவா கூறினார். யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி இடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு 197 இடம் மட்டுமே கிடைத்ததாக திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.  இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அகில இந்திய அளவில் தேர்வுகள் நடைபெறுவதால், வடமாநில இளைஞர்களே பெரும்பாலும் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த செய்தி சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேற்று வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை