கல்வான் தாக்குதலில் குறைந்தளவு சீன வீரர்கள் உயிரிழப்பு: சீன நாளிதழ் ஒப்புதல்

தினமலர்  தினமலர்
கல்வான் தாக்குதலில் குறைந்தளவு சீன வீரர்கள் உயிரிழப்பு: சீன நாளிதழ் ஒப்புதல்

பெய்ஜிங்: லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததைவிட, சீன வீரர்கள் குறைவாக தான் உயிரிழந்தனர் என சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாளிதழின் ஆசிரியர் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 15ல் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் . இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் பதிலடியில் சீன வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், அதனை அந்நாடு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. உளவுத்துறை அறிக்கையின்படி 30 முதல் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் ஹூ ஷிஜின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
கடந்த ஜூன் 15ல் கல்வானில் ஏற்பட்ட மோதலில், எனக்கு தெரிந்தவரை சீன வீரர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இது 20 இந்திய வீரர்கள் வீரமரணத்தை விட குறைவுதான். எந்த சீன வீரரையும் இந்திய ராணுவம் சிறைபிடிக்கவில்லை. ஆனால், அன்றைய நாளில், பல இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறைபிடிதத்தது எனக்கூறியுள்ளார்.

மூலக்கதை