சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்துவது பாகிஸ்தான் பொறுப்பு: இந்தியா

தினமலர்  தினமலர்
சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்துவது பாகிஸ்தான் பொறுப்பு: இந்தியா

புதுடில்லி :'அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவாக இருக்கவே, இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்கான சுமூக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, பாகிஸ்தானிடம் உள்ளது' என, இந்தியா தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், நேற்று, வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பேசியதாவது:
அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்போடு இருக்கவே, இந்தியா எப்போதும் விரும்புகிறது. பிரச்னைகளுக்கு இரு தரப்பு பேச்சு மூலம் சுமூக தீர்வு காணவும், இந்தியா தயாராக உள்ளது. ஆனால், அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் பொறுப்பு, பாகிஸ்தானுக்கு உள்ளது.இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு, தன் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை, பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் ஆதரிப்பதை, இந்தியா பல வழிகளிலும் தெரியப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த முயற்சியால், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளதை, உலக நாடுகள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளன. பயங்கரவாதிகளை ஆதரிப்பதால் தான், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க,எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.பயங்கரவாதம், வன்முறை இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே, பேச்சு வெற்றி பெறும், என, பாகிஸ்தானிடம் இந்தியா பல முறை தெரிவித்துவிட்டது.
இவ்வாறு, முரளிதரன் கூறினார்.

மூலக்கதை