'கம்ப்யூட்டர் தகவல் திருட்டை சீன அரசு ஊக்குவிக்கிறது'

தினமலர்  தினமலர்
கம்ப்யூட்டர் தகவல் திருட்டை சீன அரசு ஊக்குவிக்கிறது

வாஷிங்டன் : 'அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து, சீனாவைச் சேர்ந்த, ஐந்துபேர், தகவல்களை திருடினர்.'இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுவதை, சீன அரசு ஊக்குவித்து வருகிறது' என, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க சட்டத் துறையின் உதவி அட்டர்னி ஜெனரல், ஜெப்ரி ரோசன் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த சில நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் நுழைந்த, 'ஹேக்கர்' எனப்படும் தகவல் திருடர்கள், பல்வேறு முக்கிய தகவல்களை திருடியுள்ளனர்.இதுபோல், இந்திய அரசின் இணையதளங்கள் உள்ளிட்டவற்றிலும் அத்துமீறி நுழைந்து தகவல்களை திருடியுள்ளனர்.அமெரிக்க அரசு நடத்திய விசாரணையில், சீனாவைச் சேர்ந்த, தகவல்களை திருடும் நிறுவனத்துக்கு இதில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, ஐந்து சீனர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை