உலகம் முழுவதும் கொரோனாவால் 3.03 கோடி பேர் பாதிப்பு: 9.50 லட்சம் பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனாவால் 3.03 கோடி பேர் பாதிப்பு: 9.50 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,50,132 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,03,33,918 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,20,19,308 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 61,404 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளிலும், உயிரிழப்பு அதிமுள்ள நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருந்துவருகிறது. இதுவரையில், அமெரிக்காவில் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் 1,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.இந்தநிலையில், கேள்வி பதில் நேரத்தில் வாக்காளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ‘கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாம் நெருங்கிவிட்டோம். இன்னும் ஒரு மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை