தைவான் - அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்திப்பு; சீனா எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
தைவான்  அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்திப்பு; சீனா எதிர்ப்பு

பீஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தொடர் மோதல் போக்கு நீடித்துவருகிறது.இந்நிலையில் சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தைவானில் அமல் படுத்த முயன்று வருகிறது.


ஒரு காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த தைவான் பின்னாளில் சுதந்திரமடைந்தது.தற்போது ஹாங்காங்போல சீன கம்யூனிச அரசிடமிருந்து விடுதலை பெற்று 'ஒரு நாடு, இரு சட்டம்' என்கிற ரீதியில் தைவான் தனிநாடாக செயல்பட்டு வருகிறது. ஹாங்காங்கைப்போல தைவானையும் கையகப்படுத்த சீன அரசு தற்போது முயன்று வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் தைவான் முன்னாள் அதிபர் லீ டெங் ஹூய் மரணமடைந்தார். 97 வயதான லீ, தைவானின் மூத்த அதிபர் ஆவார்.


கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்க முக்கிய அதிகாரி கெய்த் க்ராச் தைவானுக்கு வருகைதர உள்ளார். அமெரிக்கா, தைவான் நட்புறவு குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது. இந்த சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை