இந்தியாவின் மிகப்பெரிய தலைவர், எனது உண்மையான நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் : பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்!!

தினகரன்  தினகரன்
இந்தியாவின் மிகப்பெரிய தலைவர், எனது உண்மையான நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் : பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்!!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் பாஜ.வினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முதல்வர்கள்,  அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சர்வதேச அளவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.இந்நிலையில் அமெரி்க்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகிழ்ச்சிகரமான 70-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவின் மிகப்பெரிய தலைவர், எனது உண்மையான நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.அத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் அகமதாபாத் வந்தபோது நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதைத் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வலிமையானது, மனிதகுலத்தின் நன்மைக்கான சக்தியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மூலக்கதை