ஒரு குவிண்டால் நெல்லை ரூ.850க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை: ப.சிதம்பரம் டுவிட்

தினகரன்  தினகரன்
ஒரு குவிண்டால் நெல்லை ரூ.850க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை: ப.சிதம்பரம் டுவிட்

டெல்லி: ஒரு குவிண்டால் நெல்லை ரூபாய் 850க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூபாய் 1,150 என்று அரசு நிர்ணயித்துள்ளது. ஆதரவு விலை ரூபாய் 1,150 ஆக உள்ளபோது, வியாபாரிகளுக்கு ரூபாய் 850விற்கும் நிலை விவசாயிகளுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு விளக்கம் தருமா என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை