84,372 பேர் பலி... 41.12 லட்சம் பேர் குணம்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்தது!!

தினகரன்  தினகரன்
84,372 பேர் பலி... 41.12 லட்சம் பேர் குணம்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்தது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 52.14 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 84 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 96,423 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,14,677 ஆக உயர்ந்தது.* புதிதாக1,174 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்தது..* தொற்றில் இருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்துள்ளனர்;.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 41,12,551 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,17,754 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 78.86% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.62% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.52% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் இதுவரை 6.15 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ICMR அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 10.06 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!    மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 302135 ; குணமடைந்தோர் : 812354; இறப்பு : 31351தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46610; குணமடைந்தோர் :  470192 ; இறப்பு : 8618    டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 31721 ; குணமடைந்தோர் : 198103 ; இறப்பு : 4877கேரளா : சிகிச்சை பெறுவோர் : 34380 ; குணமடைந்தோர் :87345 ; இறப்பு :  489கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :103650 ; குணமடைந்தோர் : 383077 ; இறப்பு : 7629    ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 88197 ; குணமடைந்தோர் : 508088 ; இறப்பு :  5177

மூலக்கதை