தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்'நீட்' தேர்வு ரத்து

தினமலர்  தினமலர்
தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து

சென்னை : 'அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் தொடர்வதை போலவும், ஜல்லிக்கட்டுக்கு ஒப்புதல் பெற்றது போலவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நீதிமன்ற ஆதரவை பெற்று, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
நீட் தேர்வை, தடுத்து நிறுத்தியது, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு. நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ., கட்சி. அதை ஆதரித்த கட்சி அ.தி.மு.க., அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் தொடரும் என, தமிழகத்திற்கு விலக்கு பெறப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, தி.மு.க., ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய ஜல்லிக்கட்டு மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. அதேபோல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சட்ட வழிகளை பயன்படுத்தி, சட்டசபையின் அதிகாரத்தை பயன்படுத்தி, தேவைப்பட்டால், நீதிமன்றங்களின் ஆதரவை பெற்று, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மோடிக்கு வாழ்த்து



அத்துடன், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில், 'பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளும் பெற்று, நாட்டிற்கான உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை