ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்

தினமலர்  தினமலர்
ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்

புதுடில்லி: '' ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் நடவடிக் கைகளுக்கு, மத்திய அரசு, மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது,'' என, மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர், வி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், லோக்சபாவில் கூறியதாவது:
ஐ.நா., மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்களில், பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்க திட்டமும் அடங்கும். இக்கவுன்சிலில், இந்தியா, நிரந்தர உறுப்பினராவதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இது தொடர்பாக ஆதரவு திரட்ட, ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்திற்கு முதலில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது.இந்த ஆதரவுடன், விரிவாக்க தீர்மானம் வெற்றி பெற்ற பின், நிரந்தர உறுப்பு நாடுகளை சேர்ப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதில் இடம் பெற, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
'ஹவ்டி - மோடி'க்கு அரசு செலவு செய்யவில்லைகடந்த,2019, செப்.,22ல், அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரில், 'ஹவ்டி-மோடி' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, மத்திய அரசு எந்த செலவும் செய்யவில்லை. வி. முரளிதரன், மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர்.

மூலக்கதை