விசா நிறுத்த உத்தரவு: தடை விதிக்க மறுப்பு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவருக்கு, எச் - 1பி விசா உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

ஊரடங்கு காலத்தின் போது, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை, இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைப்பதாக, ஜூன், 22ல், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்காவில் பணியாற்றி, இந்தியாவுக்கு திரும்பிய, 169 பேர் சார்பில், வேலைக்காக அமெரிக்காவுக்கு திரும்ப விசா வழங்க உத்தரவிடக் கோரி, வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால், விசாவை நிறுத்தி வைக்கும், அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க, மாவட்ட நீதிபதி, அமித் மேத்தா மறுத்துவிட்டார்.

மூலக்கதை