கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில் | செப்டம்பர் 17, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில் | செப்டம்பர் 17, 2020

துபாய்: ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான ‘ரேங்கிங்கில்’ முதலிரண்டு இடங்களை இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (871 புள்ளி), துணை கேப்டன் ரோகித் சர்மா (855) தக்கவைத்துக் கொண்டனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 112 ரன்கள் எடுத்த இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் (754), 10வது இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியில் சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்ட ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (647 புள்ளி, 26வது இடம்), அலெக்ஸ் கேரி (628 புள்ளி, 28வது இடம்) முன்னேற்றம் கண்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வேகத்தில் அசத்திய இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் (675 புள்ளி), முதன்முறையாக 4வது இடத்துக்கு முன்னேறினார். முதல் மூன்று இடங்களை நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் (722 புள்ளி), இந்தியாவின் பும்ரா (719), ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (701) தக்கவைத்துக் கொண்டனர்.

அணிகளுக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இங்கிலாந்து (123 புள்ளி), இந்தியா (119), நியூசிலாந்து (116), ஆஸ்திரேலியா (109), தென் ஆப்ரிக்கா (108) நீடிக்கின்றன.

மூலக்கதை