மலிங்கா இல்லாதது பாதிப்பு: சொல்கிறார் ரோகித் | செப்டம்பர் 17, 2020

தினமலர்  தினமலர்
மலிங்கா இல்லாதது பாதிப்பு: சொல்கிறார் ரோகித் | செப்டம்பர் 17, 2020

அபுதாபி: ஐ.பி.எல்., தொடருக்கான மும்பை அணியில் இருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா 37, சொந்த காரணங்களுக்காக விலகினார். இவர், இத்தொடரில் அதிக விக்கெட் (170) கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

இதுகுறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியது: மும்பை அணியின் ‘மேட்ச் வின்னர்’ மலிங்கா. இவரது இடத்தை நிரப்புவது எளிதானதல்ல. போட்டியில் நெருக்கடியான நேரத்தில் பலமுறை அணியை மீட்டுள்ளார். இவரது அனுபவத்தை நிச்சயமாக இழக்கிறோம். மும்பை அணிக்காக இவரது பங்களிப்பு சிறப்பானது. இந்த சீசனில் இவர் விளையாடாதது துரதிர்ஷ்டவசமானது. வேகப்பந்துவீச்சில் பட்டின்சன், தவால் குல்கர்னி, மோசின் கான் இருந்த போதிலும் மலிங்காவுடன் ஒப்பிட முடியாது. கடந்த சீசன் போல இம்முறையும் துவக்க வீரராக களமிறங்க உள்ளேன்.

இவ்வாறு ரோகித் கூறினார்.

மூலக்கதை