வரதட்சணை கொடுமைக்கு 1௦ ஆண்டு சிறை தண்டனை

தினமலர்  தினமலர்
வரதட்சணை கொடுமைக்கு 1௦ ஆண்டு சிறை தண்டனை

சென்னை : ''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று சட்ட திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்'' என முதல்வர் பழனிசாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய 1860ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்க மத்திய அரசின் அனுமதியுடன் சட்ட திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
* 'பிரிவு - 304 பி'யில் வரதட்சணை கொடுமை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை ௧௦ ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
* 'பிரிவு - 354 -பி' குற்ற நோக்கத்துடன் பெண்களின் ஆடைகளை களைவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை ஐந்து ஆண்டுகளாக் கப்படும். அதிகபட்சமாக வழங்கப்படும் ஏழு ஆண்டு சிறை தண்டனை ௧௦ ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

* 'பிரிவு - 354 - டி'யில் தவறான குற்ற நோக்கத்துடன் பின் தொடர்ந்தால் இரண்டாம் முறையும் தொடர்ந்து குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டு சிறை தண்டனை அதிகபட்மாக ஏழு ஆண்டுகளாக்க உயர்த்தப்படும்.
* 'பிரிவு - 372'ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதிற்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல்; பிரிவு -- 373ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதிற்கு உட்பட்ட நபர்களை விலைக்கு .வாங்குதலுக்கு தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு அதிகபட்ச சிறை தண்டனையை குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.ஜெ. அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களை காக்கும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

மூலக்கதை