'வேறு பகுதியில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை'

தினமலர்  தினமலர்
வேறு பகுதியில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை

புதுடில்லி : டில்லியை தவிர நாட்டின் வேறு பகுதிகளில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. இதனால் நாட்டின் வேறு பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் திறக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த மக்களின் வசதிக்காக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.


லோக்சபாவில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்தியசட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்ட கமிஷன் தன் 229 வது அறிக்கையில் 'உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு டில்லியில் அமைக்கப்பட வேண்டும்;

உச்ச நீதிமன்றத்தின் நான்கு கிளைகள் வடக்கு பகுதிக்கு டில்லியிலும் கிழக்கு பகுதிக்கு கோல்கட்டாவிலும் மேற்கு பகுதிக்கு மும்பை யிலும் தெற்கு பகுதிக்கு சென்னை அல்லது ஐதராபாதிலும் அமைக்க வேண்டும்' என பரிந்துரைத்திருந்தது.ஆனால் டில்லியை தவிர நாட்டின் வேறு பகுதிகளில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை, என கூறினார்.

மூலக்கதை