வாங்க மீனா வரவேற்கும் மோகன்லால்

தினமலர்  தினமலர்
வாங்க மீனா வரவேற்கும் மோகன்லால்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் மீனா. ரஜினிகாந்த் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் தான் அதிகப் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 20 படங்களுக்கும் மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கதாநாயகியாக சில படங்களில் நடித்தாலும் பிரபலமாகவில்லை. 'என் ராசாவின் மனசிலே' படம் தான் அவருக்குத் திருப்புமுனையைத் தந்தது.

அதன்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் தமிழிலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல ஹீரோக்களுடனும் நடித்தார்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்தவர் டிவி சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த 'த்ரிஷ்யம்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார்.

இப்போது மலையாளத்தில் 'த்ரிஷ்யம் 2' படம் ஆரம்பமாக உள்ளது. இன்று மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மோகன்லால் அவரை 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்புக்கும் வரவேற்று டுவீட் போட்டுள்ளார்.

சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் மீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மூலக்கதை