தியேட்டர்கள் மூடல் : எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

தினமலர்  தினமலர்
தியேட்டர்கள் மூடல் : எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

கொரோனா தொற்று பரவாமல் இருக்க மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலேயே ஒவ்வொரு மாநிலமாக சினிமா தியேட்டர்களை மூட சம்பந்தப்பட்ட அரசுகள் உத்தரவிட்டன. சினிமா தியேட்டர்களை மூடி ஆறு மாதங்களாகிவிட்டது.

மீண்டும் சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து அரசு இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்றே சொல்லி வருகிறார்கள்.

இந்த ஆறு மாதங்களாக சினிமா தியேட்டர்களை மூடியதால் சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தாங்கள் திணறி வருவதாக சினிமா தியேட்டர்கள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சினிமா தியேட்டர்கள் மூடியதில் மட்டும் அவ்வளவு நஷ்டம் என்றாலும். அதே சமயம் படங்களை வெளியிட முடியாத காரணத்தினால் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்த நஷ்டத்தைச் சரிக்கட்டத் தியேட்டர்களைத் திறந்தாலும் மக்கள் வந்தால்தான் மேலும் நஷ்டம் ஆகாமல் தடுக்க முடியும். 200 பேர் அமர வேண்டிய தியேட்டரில் 20 பேர் மட்டுமே வந்தால் அந்த நஷ்டம் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது.

மற்ற தொழில்கள் ஓரளவிற்கு தங்கள் நஷ்டத்தை சரிக்கட்டி நடைபெற ஆரம்பித்துவிட்டது. ஆனால், சினிமா தொழில் மட்டும் மீண்டும் முழுமையாக ஆரம்பமானாலும் நஷ்டத்தைத் தவிர்க்க மேலும் ஒரு வருட காலம் ஆகலாம் என்கிறார்கள்.

மூலக்கதை