அடுத்து யார் படம்? - ரகசியம் உடைக்கும் லோகேஷ் கனகராஜ்!

தினமலர்  தினமலர்
அடுத்து யார் படம்?  ரகசியம் உடைக்கும் லோகேஷ் கனகராஜ்!

மாநகரம், கைதி என தனது முதல் இரண்டு படங்கள் மூலமே மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனாலேயே தனது மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. விஜய் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு மக்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான அப்படம் கொரோனா பிரச்சினையால் தள்ளிப் போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் 'மாஸ்டர்' திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சினையால் ரஜினி தனது அண்ணாத்தே படப்பிடிப்பிலேயே கலந்து கொள்ளாத நிலையில், இப்படம் இப்போதைக்கு சாத்தியமில்லை என, அதற்கு முன்னர் கமலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.

இது ஒருபுறம் இருக்க, மீண்டும் விஜய்யையே இயக்குகிறார் என்றும், கைதி இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் என்றும் பல செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில், தான் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று(செப்.,16) மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். எனவே, லோகேஷ் கனகராஜின் டுவீட்டை ரஜினி, கமல், விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, 'மாஸ்டர்' படத்தின் அப்டேட் வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மூலக்கதை