அமெரிக்காவின் எதிர்ப்புக்கிடையிலும் கொரோனாவுக்கு எதிரான போரில் 40 நாடுகளில் மருத்துவப் படையை அனுப்பி கம்பீரமாக எழுந்து நிற்கும் கியூபா!!

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் எதிர்ப்புக்கிடையிலும் கொரோனாவுக்கு எதிரான போரில் 40 நாடுகளில் மருத்துவப் படையை அனுப்பி கம்பீரமாக எழுந்து நிற்கும் கியூபா!!

கியூபா : சீனாவில் இருந்து வெடித்து கிளம்பி உலகை வியாபித்து இருக்கும் கொரோனா கொடும் கிருமியால் வல்லரசுகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகள் செய்வதறியாது நிற்கின்றன. ஆனால் உலக பந்தில் ஒரு புள்ளியைப் போல இருக்கும் சிறிய நாடு ஒன்று மருத்துவர்களின் படை மூலமாக உலக நாடுகள் பலவற்றுக்கும் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போரிட உதவிக்கரம் நீட்டி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் சிறிய நாடு ஒன்று வெண் சீருடைப் படை எனப்படும் மருத்துவப் படையை கொண்டு தனது சக்திக்கு மீறிய யுத்தத்தை வெற்றிகரமாக அதே நேரத்தில் சத்தமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. அந்த நாடு கியூபா தான். மிகச் சிறிய நாடான கியூபா வளமான சுகாதாரக்  கட்டமைப்புடன் கொரோனா எதிர்ப்பு போரில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பல பெரிய நாடுகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள் இன்றி தவிக்கும் நிலையில், தங்களிடம் கூடுதலாக உள்ள மருத்துவர்களை பிற நாடுகளுக்கு அனுப்பி கொண்டுள்ளது கியூபா. இதுவரை உலகில் 5 கண்டங்களில் உள்ள சுமார் 40 நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள கியூபா மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் உதவியை பெற்று பயன்படுத்தி உள்ளனர். கியூபா தனது தன்னலமற்ற மருத்துவ சேவையால் உலகின் நம்பிக்கையை பெற்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது என்றால் அது மிகை இல்லை.

மூலக்கதை