குளிர்காலம் நெருங்குவதால் சீன ஊடுருவலை தடுக்க ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், கவச உடைகள் அனுப்பி வைப்பு!!

தினகரன்  தினகரன்
குளிர்காலம் நெருங்குவதால் சீன ஊடுருவலை தடுக்க ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், கவச உடைகள் அனுப்பி வைப்பு!!

லடாக் : குளிர்காலம் நெருங்கி வரும் இமயமலை தொடரில் சீனா ஊடுருவலை தடுக்க எல்லைப் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகிறது. பனிக்காலத்தில் போருக்கு தேவையான கருவிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் குவிக்கப்பட்டு வருகிறது. குளிர்காலத்தில் தாக்குப்பிடிக்கும் டெண்ட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் போர் விமானங்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எல்லை நிலைமையை வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா அத்துமீறும் பட்சத்தில் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ரேடார் உபகரணங்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத  அதே சமயம் கடுமையான குளிரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உடைகள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் சீனா எல்லையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. எல்லையில் 12000 அடி உயரத்தில் உள்ள மலைகளில் ஊடுருவச் சீனா திட்டமிட்டுள்ளது. இந்த பகுதிகளில் குளிர் காலத்தில் - 50 டிகிரி வெப்பநிலை நிலவும். இதை சமாளிக்கவே இந்தியா தற்போது தயாராகி வருகிறது.

மூலக்கதை