ரூ.58 கோடி லாபம் சம்பாதித்து தந்த தில் பேச்சரா

தினமலர்  தினமலர்
ரூ.58 கோடி லாபம் சம்பாதித்து தந்த தில் பேச்சரா

ஒரு ஹீரோ இறந்தபின்னர் அவர் நடித்த படம் ரிலீஸாவது என்பது ரொம்பவே அரிதான விஷயம்.. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த 'தில் பேச்சரா' படம் அவர் மறைவுக்கு பின்னர்தான் வெளியானது. 27.67 கோடி செலவில் தயாரான இந்தப்படத்தை 52.08 கோடி கொடுத்து வாங்கிய டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒடிடியில் வெளியிட்டது.

படத்தின் தயாரிப்பாளர் புரமோஷனுக்காக செய்த 2.5 கோடி செலவு போக, தயாரிப்பாளருக்கு இதிலேயே கிட்டத்தட்ட 22 கோடி லாபம் கிடைத்துவிட்டது. மேலும் இதன் சாட்டிலைட் உரிமை மூலமாக 32 கோடியும், ஆடியோ ரைட்ஸ் மூலமாக 6.5 கோடியும் என இதர செலவுகளை கழித்தாலும் கூட மொத்தமாக 57.87 கோடி ரூபாய் லாபம் 'தில் பேச்சரா' தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணத்துக்குப்பின் அவர்மீது ஏற்பட்ட அனுதாப அலைதான் இந்த அளவுக்கு லாபம் கிடைக்க காரணம் என சொல்லப்படுகிறது.

மூலக்கதை