2.97 கோடி பேருக்கு பாதிப்பு...9.38 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக உயர்வு

தினகரன்  தினகரன்
2.97 கோடி பேருக்கு பாதிப்பு...9.38 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக உயர்வு

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா - 67,87,625இந்தியா - 49,30,236பிரேசில் - 43,84,299ரஷியா - 10,73,849பெரு - 7,38,020கொலம்பியா - 7,28,590மெக்சிகோ - 6,71,716தென் ஆப்பிரிக்கா - 6,51,521ஸ்பெயின் - 6,03,167அர்ஜெண்டினா - 5,77,338கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-அமெரிக்கா - 2,00,171பிரேசில் - 1,33,207இந்தியா - 80,776மெக்சிகோ - 71,049இங்கிலாந்து - 41,664இத்தாலி - 35633பிரான்ஸ் - 30,999ஸ்பெயின் - 30,004பெரு - 30,927ஈரான் - 23,453கொலம்பியா - 23,288கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-அமெரிக்கா - 40,61,873இந்தியா - 38,59,339பிரேசில் - 36,71,128ரஷியா - 8,84,305கொலம்பியா - 6,07,978தென் ஆப்ரிக்கா - 5,83,126பெரு - 5,80,753மெக்சிகோ - 4,75,795

மூலக்கதை