வி ஹேவ் லெக்ஸ் - இளம் நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்

தினமலர்  தினமலர்
வி ஹேவ் லெக்ஸ்  இளம் நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்

மலையாள திரையுலகில் கடந்த வருடம் தான் கதாநாயகியாக அறிமுகமானவர் பதினெட்டு வயதே ஆன அனஸ்வரா ராஜன்.. தமிழில் த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் 'ராங்கி' படத்தில் கூட நடித்துள்ளார். சமீபத்தில் இவர் அரைக்கால் சட்டை அணிந்தபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வழக்கம்போல அனஸ்வராவையும் சிலர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்..

“உங்கள் வேலையை பாருங்கள்” என அனஸ்வராவும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டார். இருந்தாலும் ரீமா கல்லிங்கல், ஆஹானா கிருஷ்ணா உள்ளிட்ட சக நடிகைகள் பலரும் இந்த பிரச்சனையை லேசில் விடுவதாக தெரியவில்லை.

நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரிந்துகட்டிக்கொண்டு “எங்களுக்கும் கால்கள் இருக்கின்றன” என்கிற அர்த்தத்தில் 'வி ஹேவ் லெக்ஸ்' என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி தங்களது கால்கள் முழுவதுமாக தெரியும்படியான புகைப்படங்களை தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வி ஹேவ் லெக்ஸ் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மூலக்கதை