10 கோடி கிளப்பில் விஜய்யின் 3வது பாடல்

தினமலர்  தினமலர்
10 கோடி கிளப்பில் விஜய்யின் 3வது பாடல்

தமிழ் சினிமா பாடல்கள், டிரைலர்கள், டீசர்கள் யு-டியூபில் என்ன சாதனை படைக்கிறது என்பதுதான் இப்போதைய டிரென்ட். தமிழ் சினிமா பாடல்களில் இதுவரையில் 16 பாடல்கள் 10 கோடி கிளப்பில் உள்ளன.

'மாரி 2' படப் பாடலான 'ரவுடி பேபி' 95 கோடி பார்வைகளைக் கடந்து 100 கோடி பார்வையை நெருங்க உள்ளது. அதற்கடுத்து '3' படப் பாடலான 'ஒய் திஸ் கொல வெறி' பாடல் 24 கோடி பார்வைகளைக் கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற 14 பாடல்களும் 10 கோடியைக் கடந்த பாடல்கள் மட்டுமே.

இப்போது 17வது பாடலாக 'பிகில்' படத்தில் இடம் பெற்ற 'வெறித்தனம்' பாடல் 100 மில்லியனைக் கடந்து 10 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 10 கோடி கிளப்பில் இணைந்துள்ள விஜய்யின் 3வது சினிமா பாடல் இது.

இதற்கு முன்னதாக 'மெர்சல்' படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' பாடல், 'தெறி' படத்தின் 'என் ஜீவன்' ஆகிய பாடல்கள் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ள விஜய் பாடல்கள்.

தனுஷ் பாடல்களான 'ரவுடி பேபி, ஒய் திஸ் கொலவெறி, டானு டானு, மறு வார்த்தை பேசாதே' என நான்கு பாடல்கள் 10 கோடி கிளப்பில் உள்ளன. இவருக்கு அடுத்து விஜய் மூன்று பாடல்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மூலக்கதை