கீர்த்தி சுரேஷின் தெலுங்கு பட ரிலீஸுக்கு சிக்கல்

தினமலர்  தினமலர்
கீர்த்தி சுரேஷின் தெலுங்கு பட ரிலீஸுக்கு சிக்கல்

தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் நேனு சைலஜா. அதேசமயம் இந்தப்படத்திற்கு முன்பே தெலுங்கில் அவர் முதன்முதலாக ஒப்புக்கொண்டு நடித்த படம் தான் 'ஏய்னா இஷ்டம் நுவ்வு'. இதில் நவீன் விஜய்கிருஷ்ணா என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். சில காரணங்களால் இந்தப்படம் ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்தப்படம் 'ஜனகிதோ நேனு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஓடிடியில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

இந்தநிலையில் தயாரிப்பாளர் நட்டி குமார் என்பவர் இந்தப்படத்தை தயாரித்த சாந்தி அத்தலா என்பவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பே இந்தப்படத்தின் உரிமையை தனக்கு சாந்தி அத்தலா விற்றுவிட்டதாகவும், ஆனால் தற்போது அதை மறைத்து டைட்டிலை மாற்றி படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ள நட்டி குமார், அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை