82,066 பேர் பலி.. 39. 42 லட்சம் பேர் குணம்.. நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50.20 லட்சத்தை தாண்டியது.. கடந்த11 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிப்பு

தினகரன்  தினகரன்
82,066 பேர் பலி.. 39. 42 லட்சம் பேர் குணம்.. நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50.20 லட்சத்தை தாண்டியது.. கடந்த11 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50.20 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 82 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 90,123 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,20,359 ஆக உயர்ந்தது.* புதிதாக 1,290 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  82,066  ஆக உயர்ந்தது..* தொற்றில் இருந்து ஒரே நாளில் 82,961 பேர் குணமடைந்துள்ளனர்;.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 39,42,360 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,95,933 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 78.53% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.63% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.84% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 10,72,845 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 5,83,12,273 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!    மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 292174 ; குணமடைந்தோர் : 775273; இறப்பு : 30409தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46806 ; குணமடைந்தோர் : 458900 ; இறப்பு : 8502    டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 29787 ; குணமடைந்தோர் : 191203 ; இறப்பு : 4806கேரளா : சிகிச்சை பெறுவோர் : 31226 ; குணமடைந்தோர் : 82341 ; இறப்பு : 466கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 98555 ; குணமடைந்தோர் :369229 ; இறப்பு : 7481    ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 92353 ; குணமடைந்தோர் : 486531 ; இறப்பு : 5041

மூலக்கதை