புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து நீங்கள் கணக்கிடவில்லை என்றால் உயிரிழப்புக்கள் நிகழவில்லையா? ராகுல் காந்தி கேள்வி

தினகரன்  தினகரன்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து நீங்கள் கணக்கிடவில்லை என்றால் உயிரிழப்புக்கள் நிகழவில்லையா? ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: மக்களவையில் நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து தங்களது மாநிலங்களுக்கு திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிடம் விவரங்கள் உள்ளதா? அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.  இதற்கு எழுத்து மூலமாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் அளித்த பதிலில், “ புலம் பெயர் தொழிலாளர்கள் யாரும் இறக்கவில்லை. அது குறித்த விவரங்கள் எதுவும் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை. எனவே இழப்பீடு வழங்குவது குறித்த கேள்வி எழவில்லை” என குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், “ ஊரடங்கு காலத்தில் எத்தனை புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர், வேலை வாய்ப்பு இழப்பு என்பது குறித்து அரசுக்கு தெரியாது.  நீங்கள் கணக்கிடவில்லை என்றால் மரணங்கள் நிகழவில்லையா? தொழிலாளர்கள் விவகாரம் மத்திய அரசிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர்களின் இறப்பை உலகம்  அறிந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அரசிடம் இது குறித்து எந்த தகவலும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.தவறாக வழிநடத்தும் பிரதமர் மோடிலடாக்கில் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விளக்கமளித்தார். இதற்கு பதிலளித்து பேச காங்கிரஸ் எம்பிக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து ராகுல் தனது டிவிட்டரில், ‘‘சீனா ஊடுருவல் குறித்த பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துவது, பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையின் மூலம் தெளிவாக தெரிகிறது. நம் தேசம் எப்போது ராணுவ வீரர்களுக்கு துணை நிற்கும். ஆனால் மோடி அவர்களே எப்போது நீங்கள் சீனாவை எதிர்த்து நிற்கப் போகிறீர்கள்? எப்போது சீனாவிடமிருந்து நமது நிலத்தை மீட்கப் போகிறீர்கள்? சீனாவின் பெயரைச் சொல்ல பயப்படாதீர்கள்’’ என கூறி உள்ளா

மூலக்கதை