ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 4 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: 18 வகையான மூலிகைகள் தெளித்து சுத்தம் செய்தனர்

தினகரன்  தினகரன்
ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 4 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: 18 வகையான மூலிகைகள் தெளித்து சுத்தம் செய்தனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் மற்றும் இந்தாண்டு வருடாந்திர பிரமோற்சவம் வரும் 19ம் தேதி, நவராத்திரி பிரமோற்சவம் அடுத்த மாதம் 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, கோயிலில் நேற்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. கோயிலின் பிரதான நுழைவு வாயில் அடைத்து, அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்பட்டது.  பின்னர், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம் திருச்சூனம், கிச்சலிகட்டை உள்ளிட்ட 18 வகையான சுகந்த மூலிகை பொருட்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மூலக்கதை