அமெரிக்க வேலை வாய்ப்பை முறியடிக்கும் டிரம்ப் அரசு? டிக் டாக் நிறுவனர் கிடுக்குப்பிடி

தினமலர்  தினமலர்
அமெரிக்க வேலை வாய்ப்பை முறியடிக்கும் டிரம்ப் அரசு? டிக் டாக் நிறுவனர் கிடுக்குப்பிடி

வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பைட் டான்ஸ் சீன நிறுவனத்தின் பொழுதுபோக்கு செயலியான டிக் டாக் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் தடை செய்யப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்க அரசின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக டிரம்ப் அரசு குற்றம் சாட்டியது.

இதனை அடுத்து அமெரிக்க குடிமக்கள் பலர் டிக் டாக்கை தடை செய்ததால் பாதிக்கப்பட்டனர். பைட் டான்ஸ், டிக் டாக்கை அமெரிக்க நிறுவனம் ஏதாவது ஒன்றுக்கு விற்றுவிட்டால் அமெரிக்காவில் டிக் டாக் தொடர்ந்து செயல்பட தான் அனுமதி வழங்குவதாக முன்னதாக அறிவித்திருந்தார் டிரம்ப். இதனை அடுத்து அந்த நிறுவன உரிமையாளர் சாங் யிம்மிங் அமெரிக்க அரசுமீது கடும் அதிருப்தி அடைந்தார்.

அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிளுடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக சாங் அறிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்காவில் டிக்டாக் உரிமையை முழுதுமாக தக்கவைக்க முயன்று வருகிறார் சாங்.

ஆனால் இதனை குடியரசுக் கட்சி ஏற்க மறுக்கிறது. டிக் டாக் செயலியின் முழு உரிமையும் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றால்தான் அமெரிக்காவில் அந்த செயலி அனுமதிக்கப்படும் என்பதில் டிரம்ப் அரசு உறுதியாக உள்ளது.

இதனை அடுத்து அமெரிக்காவின் மிசோரி மாகாண குடியரசு கட்சி செனேட்டர் ஜாஷ் ஹவுலே அமெரிக்கா நிதி அமைச்சக செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆரக்கிள் உடன் இணைந்து பைட் டான்ஸ் நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆரக்கிள் மற்றும் பைட் டேன்ஸ் நிறுவன கூட்டு ஒப்பந்தத்தினால் அமெரிக்காவில் புதிதாக 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமெரிக்க பொருளாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது டிரம்ப் அரசுக்கு எதிராக அமைந்துள்ளது. வரும் நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் பைட் டான்ஸ் மற்றும் ஆரக்கிள் நிறுவன கூட்டு ஒப்பந்தத்தை தடைசெய்ய முயற்சிப்பதும் மூலமாக வேலைவாய்ப்பை டிரம்ப் அரசே முறியடிப்பதாக ஜனநாயகக் கட்சி விமர்சித்துவருகிறது.

மூலக்கதை