80 சதவீதத்தினர் நோஞ்சான்களே!

தினமலர்  தினமலர்
80 சதவீதத்தினர் நோஞ்சான்களே!

நடப்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாரதிராஜா, 'நோஞ்சான்' என பேசியது விவகாரமானது.

இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் டி.சிவா நேற்று கூறியதாவது: பாரதிராஜா, நேர்மையான அக்னி மனம் படைத்தவர். சினிமாவுக்கு எதிரான விஷயங்களில், அவரது ஆதரவு கரம் எப்போதும் உண்டு. நோஞ்சான் என்பது, வலிவற்றவர்களின் குரலற்ற நிலையை சுட்டிக்காட்டுவது மட்டுமே. அவர் எப்போதுமே, யாரையுமே நையாண்டி செய்ததில்லை. தயாரிப்பாளர்களின், 80 சதவீதத்தினர் நோஞ்சான்கள் தான். அவர்களுக்காக குரல் தர வந்துள்ள மூத்த கலைஞன் பாரதிராஜா.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை