வருவாரா ஸ்டீவ் ஸ்மித் | செப்டம்பர் 15, 2020

தினமலர்  தினமலர்
வருவாரா ஸ்டீவ் ஸ்மித் | செப்டம்பர் 15, 2020

மான்செஸ்டர்: இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. மான்செஸ்டரில் 3வது போட்டி செப். 16ல் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், முதலிரண்டு போட்டியில் விளையாடவில்லை. சமீபத்தில் இவருக்கு நடத்தப்பட்ட மூளை அதிர்ச்சி சோதனையில் தேறினார். நேற்று நடந்த வலைப்பயிற்சியில் பங்கேற்றார். இதனால் 3வது போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘‘மூளை அதிர்ச்சி சோதனையில் தேறிய, ஸ்டீவ் ஸ்மித் சரியான திசையில் கண்காணிக்கப்படுகிறார். இவர் 3வது போட்டிக்கு முன் சரியாகிவிடுவார் என நம்புகிறோம். ஒருவேளை இவர் மீண்டும் விளையாடவில்லை என்றால், உடல் நலனை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கமாட்டார்,’’ என்றார்.

மூலக்கதை