மும்பை அணியில் சச்சின் மகன் | செப்டம்பர் 15, 2020

தினமலர்  தினமலர்
மும்பை அணியில் சச்சின் மகன் | செப்டம்பர் 15, 2020

அபுதாபி: இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின். இவரது மகன் அர்ஜுன் 20, வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’. இதுவரை ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்காத இவர், இந்த சீசனுக்கான ஏலத்திலும் பங்கேற்கவில்லை. 

இருப்பினும் அபுதாபியில் மும்பை அணி பவுலர்கள் டிரன்ட் பவுல்ட், பட்டின்சன், ராகுல் சகாருடன் இணைந்து காணப்பட்டார். நீச்சல் குளத்தில் சக வீரர்களுடன் உள்ள போட்டோ, நேற்று வெளியானது. இதனால் இவர் மும்பை அணியில் இணைந்துள்ளாரா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒருவேளை வலைப்பயிற்சியில் மும்பை அணி வீரர்களுக்கு பவுலிங் செய்வதற்காக அர்ஜுன் சென்றிருக்கலாம். 

மூலக்கதை