ஸ்டோக்ஸ் சந்தேகம் * ராஜஸ்தான் சோகம் | செப்டம்பர் 15, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டோக்ஸ் சந்தேகம் * ராஜஸ்தான் சோகம் | செப்டம்பர் 15, 2020

துபாய்: ஐ.பி.எல்., தொடரின் முதல் சீசனில் (2008) கோப்பை வென்றது ராஜஸ்தான். இதன் பின் பெரியளவில் சோபிக்கவில்லை. இம்முறை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. 

தவிர இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், பட்லர், பென் ஸ்டோக்சை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், ‘கேன்சர்’ பாதிக்கப்பட்ட தந்தை சிகிச்சைக்காக, ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்றுள்ளார். இவரது துபாய் வருகை குறித்து இதுவரை எவ்வித உறுதியான தகவலும் அணிக்கு கிடைக்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் சோகத்தில் உள்ளது. ஏனெனில் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை என்றால், பேட்டிங்கில் ‘மிடில் ஆர்டர்’ சிக்கலுக்கு உள்ளாகும். ஒருவேளை ஸ்டோக்ஸ் வரவில்லை எனில், தென் ஆப்ரிக்காவின் மில்லர் அல்லது டாம் கரானை (இங்கிலாந்தை) வைத்து சமாளிக்க திட்டமிட்டுள்ளது

மூலக்கதை