தேறினார் பிரீத்தி | செப்டம்பர் 15, 2020

தினமலர்  தினமலர்
தேறினார் பிரீத்தி | செப்டம்பர் 15, 2020

துபாய்: பஞ்சாப் ஐ.பி.எல்., அணி சக உரிமையாளர், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா 45. 13வது சீசன் போட்டிகளை காண துபாய் சென்றுள்ள இவர், தற்போது ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா சோதனை நடந்தது.

இதில் தேறிய உற்சாகத்தில் உள்ளார். இதுகுறித்த வீடியோவை ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில்,‘நேற்றுடன் ஐந்து நாட்கள் முடிந்தன. ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் போதும், முடிவு நல்லவிதமாக வரவேண்டும் என்ற அச்சம் உள்ளது. மூன்றாவது கொரோனா சோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளதால், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உள்ளேன். இன்னும் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் இரண்டு சோதனைகள் மீதமுள்ளன,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை