புதிய பங்குகள் வெளியீடு: களம் காணும் நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
புதிய பங்குகள் வெளியீடு: களம் காணும் நிறுவனங்கள்

புதுடில்லி:கொரோனா தாக்கம் ஒரு பக்கம் இந்திய பொருளாதாரத்தை பதம் பார்த்துக் கொண்டிருந்தாலும், பங்குச் சந்தைகள் ஆறுதல் அளிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பல நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளன.

ஜெய்குமார்கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிறுவனமான, ஜெய்குமார் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.புதிய பங்கு வெளியீட்டுக்காக, கடந்த ஜூன் மாதம், செபிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த, 10ம் தேதி அனுமதி கிடைத்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, இந்நிறுவனம், 79 லட்சம் பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.நாசிக்கில் நடைபெற இருக்கும் குடியிருப்பு திட்டம் ஒன்றிலும், வேறு சில திட்டங்களிலும் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை பயன்படுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கேம்ஸ் நிறுவனம்தேசிய பங்குச் சந்தை யின் பின்னணியில் இயங்கும், கேம்ஸ் எனும், கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம், 21ம் தேதியன்று, பங்கு வெளியீட்டுக்கு வரும் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 1500 _-1600 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, நிறுவன பங்குதாரர்களின், 1.22 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

சென்னையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில், என்.எஸ்.இ., இன்வெஸ்ட்மென்ட்ஸ், வார்பர்க் பின்கஸ், எச்.டி. எப்.சி., குழுமம் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.கெம்கான் கெமிக்கல்ஸ்பரோடாவை சேர்ந்த, ரசாயன தயாரிப்பு நிறுவனமான இது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.


இந்நிறுவனமும், 21ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 175 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 43 லட்சம் நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 350 கோடி ரூபாய் அளவுக்கு நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

கல்யாண் ஜுவல்லர்ஸ்கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம், 1,750 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், சில விளக்கங்களை இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் வங்கிகளிடம் கேட்டிருக்கிறது, செபி.இருப்பினும், எது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின்போது, 1,000 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 750 கோடி ரூபாய்க்கு நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல், சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

மூலக்கதை