ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன்: ஸ்ரேயாஸ் அய்யர்

தினகரன்  தினகரன்
ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன்: ஸ்ரேயாஸ் அய்யர்

டெல்லி: ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன் என ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு மார்ச் 29 - மே 4 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால்,கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தொடர், வரும்19ம் தேதி முதல் நவ.10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து வீரர்கள் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் போட்டியிலும் எந்த ஒரு அணியும் தோல்வியை சந்திக்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது இல்லை. இந்தநிலையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன். இதற்காக எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த சீசனில் கடுமையாக போராடுவார்கள் என கூறினார்.

மூலக்கதை