தமிழகம், கேரளத்தில் ரூ.1600 கோடி சுருட்டல்; பாப்புலர் நிதிநிறுவன மோசடியை சிபிஐ விசாரிக்கும்: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம், கேரளத்தில் ரூ.1600 கோடி சுருட்டல்; பாப்புலர் நிதிநிறுவன மோசடியை சிபிஐ விசாரிக்கும்: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாப்புலர் நிதிநிறுவனம் தொடங்கப்பட்டது. நகைக்கடன், பணப்பரிமாற்றம் உட்பட பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்கியது.

நாளடைவில் இந்த நிறுவனம் கேரளா முழுவதும் செயல்பட தொடங்கியது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் கட்டினர்.

தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. இந்த மாநிலங்களில் 238 கிளைகள் உள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு திடீரென முதிர்ச்சித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அனைத்து கிளைகளும் அதிரடியாக மூடப்பட்டன.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டேனியல், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் தலைமறைவாயினர். போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 2 மகள்களும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் கோட்டயம் மாவட்டம் சங்கணாச்சேரியில் வைத்து உரிமையாளர் டேனியல் மற்றும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிறுவனம் ரூ. 1,600 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உரிமையாளரின் நெருங்கிய உறவினர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.மோசடி பணம் இவர்களது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி பணத்தை பினாமி பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளிலும், பல நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிபிஐ மற்றும் இன்டர்போல் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை ேகட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் ெசய்யப்பட்டன.

இந்த நிலையில் கேரளா மற்றும் வெளிமாநிலங்களிலும் பாப்புலர் நிதிநிறுவனம் பெருமளவு மோசடி செய்துள்ளதால், இந்த மோசடி குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்ைக எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் ெதரிவித்துள்ளார்.

.

மூலக்கதை