கொரோனா மருந்துக்கான ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியது

தினகரன்  தினகரன்
கொரோனா மருந்துக்கான ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியது

லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. எதிர்பாராதவிதமாக சமீபத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி சோதனை கடந்த வாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ‘விளக்க முடியாத பக்கவிளைவு’ காரணமாக தடுப்பூசி சோதனை நிறுத்தப்படுகிறது என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் தடுப்பூசியின் சோதனை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாஸ்கல் கூறுகையில், ‘எந்த ஒரு தடுப்பூசி சோதனையிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பானதுதான். தடுப்பூசி அளிக்கப்பட்ட தன்னார்வலருக்கு நரம்பியல் சார்ந்த கோளாறு ஏற்பட்டிருந்தது. தற்போது அவர் குணமாகிவிட்டார். இதனால் மீண்டும் சோதனை தொடங்கப்படும்’ என்றார். இந்தியாவில் சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையை செய்து வருகிறது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும் இங்கும் மீண்டும் பரிசோதனை தொடங்கப்படும் என அந்நிறுவனம் கூறி உள்ளது.

மூலக்கதை