தோனிக்கு இடமில்லை: பிராட் ஹாக் ‘லெவன்’ அணியில் | செப்டம்பர் 14, 2020

தினமலர்  தினமலர்
தோனிக்கு இடமில்லை: பிராட் ஹாக் ‘லெவன்’ அணியில் | செப்டம்பர் 14, 2020

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ‘சுழல்’ வீரர் பிராட் ஹாக் 49. இவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கவுள்ள 13வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்கும் வீரர்களை கொண்டு ‘லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். இதில் சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூரு அணியின் டிவிலியர்ஸ், பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த அணிக்கு கேப்டனாக, ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் (ஹைதராபாத்), ரோகித் சர்மா (மும்பை) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது, 4வது இடத்துக்கு முறையே பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, வில்லியம்சன் தேர்வாகினர்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷாப் பன்ட் (டில்லி) வாய்ப்பு பெற்றுள்ளார். ‘ஆல்–ரவுண்டர்களாக’ ஆன்ட்ரி ரசல் (கோல்கட்டா), சுனில் நரைன் (கோல்கட்டா), ரவிந்திர ஜடேஜா (சென்னை) இடம் பிடித்தனர். வேகப்பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் (ஹைதராபாத்), ஜஸ்பிரித் பும்ரா (மும்பை), ‘சுழல்’ வீரராக யுவேந்திர சகால் (பெங்களூரு) தேர்வாகினர்.

மூலக்கதை