இந்திய தொடர்: ரசிகர்களுக்கு அனுமதி * ஆஸி., புதிய முடிவு | செப்டம்பர் 14, 2020

தினமலர்  தினமலர்
இந்திய தொடர்: ரசிகர்களுக்கு அனுமதி * ஆஸி., புதிய முடிவு | செப்டம்பர் 14, 2020

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட உள்ளது.

ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டிச. 3–7 முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கவுள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் ‘பாக்சிங் டே’ போட்டியாக டிச. 26–30ல் விக்டோரியா மாகாணத்தின் மெல்போர்னில் நடக்க இருந்தது. ஆனால் இங்கு அதிகமான கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஜூலை முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் 90 சதவீத கொரோனா பரவலில் 75 சதவீதம் இங்கு தான் ஏற்படுகிறது. 

இதனால் மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கும் என நம்பப்படுகிறது. இதுகுறித்து விக்டோரியா மாகாண தலைவர் டேனியல் ஆன்ரூஸ் கூறுகையில்,‘‘ டிச. ல் நடக்கவுள்ள கிரிக்கெட், அடுத்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் போது ரசிகர்களை பாதுகாப்பான முறையில் மைதானத்தில் அனுமதிப்பது எப்படி என யோசித்து வருகிறோம். எவ்வளவு பேரை அனுமதிப்பது என இப்போது சொல்ல முடியாது,’’ என்றார்.

மூலக்கதை