‘பார்த்தாலே போதும்’ * ஆடம் ஜாம்பா பரவசம் | செப்டம்பர் 14, 2020

தினமலர்  தினமலர்
‘பார்த்தாலே போதும்’ * ஆடம் ஜாம்பா பரவசம் | செப்டம்பர் 14, 2020

மான்செஸ்டர்: ‘‘கோஹ்லி பேட்டிங் செய்யும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்,’’ என ஆடம் ஜாம்பா தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா 29. ஐ.பி.எல்., தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியது:

ஐ.பி.எல்., தொடர் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. பெங்களூரு அணியின் முன்னணி பவுலர் சகாலுடன் இணைந்து பந்துவீச முடியும் என நம்புகிறேன். இது சிறப்பாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். தவிர அணி இக்கட்டான நேரங்களில் தவிக்கும் போது, எனக்கு பந்து வீச வாய்ப்பு வர வேண்டும். 

அடுத்து கோஹ்லி, டிவிலியர்ஸ் என சிறந்த வீரர்களுடன் களமிறங்க காத்திருக்கிறேன். இதில் கோஹ்லி பயிற்சி செய்வது, பேட்டிங் செய்யும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பதால், வரும் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஆடம் ஜாம்பா கூறினார்.

மூலக்கதை