‘பாலைவன கிரிக்கெட்’ * என்ன சொல்கிறார் டிரன்ட் பவுல்ட் | செப்டம்பர் 14, 2020

தினமலர்  தினமலர்
‘பாலைவன கிரிக்கெட்’ * என்ன சொல்கிறார் டிரன்ட் பவுல்ட் | செப்டம்பர் 14, 2020

அபுதாபி: ‘‘பாலைவனத்தின் நடுவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஐ.பி.எல்., தொடருக்கு தயாராவது சவாலானது,’’ என டிரன்ட் பவுல்ட் தெரிவித்தார்.

நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்ட் 31. ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் (2015–16), கோல்கட்டா (2017), டில்லி (2017–18) அணிகளுக்காக விளையாடிய இவர், இம்முறை மும்பை அணிக்காக விளையாட உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியது:

உலகின் சிறிய நாடான நியூசிலாந்தில் இருந்து வருகிறேன். இப்போது இங்கு குளிர்காலம். 7 அல்லது 8 டிகிரி செல்சியஸ் தான் வெப்ப நிலை உள்ளது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில், பாலைவனத்தின் நடுவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், கிரிக்கெட் போட்டிக்கு தயாராக வேண்டும். இது சவாலானது. 

இதற்கு முன் இங்கு ஒருசில போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஒவ்வொரு நிமிடத்துக்கும் திடீர் திடீரென மாறும் இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து நன்கு தெரியும். ஆனாலும் ஆடுகளம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறேன். 

இது சரியாக இருந்தால் பவுலிங் பிரிவாக நான் அணிக்கு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து தெளிவான பார்வை கிடைக்கும். நாங்கள் எதிர்பார்க்கும் இடத்தில் பந்தை ‘பிட்ச்’ செய்து பழகி விட்டால், எதிரணியை விட சிறப்பாக விளையாடத் துவங்கி விடுவோம். 

ஐ.பி.எல்., தொடரில் பல அணிகளில் விளையாடினாலும், மும்பை அணிக்காக முதன் முறையாக களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வீரரும் அவரவர் பணியை சரியாகச் செய்வது உறுதி. ஏனெனில் இது தான் மும்பை அணியின் பலம்.

இவ்வாறு டிரன்ட் பவுல்ட் கூறினார்.

மூலக்கதை