நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் ஆகஸ்டில் 0.16 சதவீதமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் ஆகஸ்டில் 0.16 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் மொத்தவிலை பணவீக்க விகிதம், 0.16 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இதற்கு முந்தைய நான்கு மாதங்களில், மைனசில் இருந்த மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில், உணவு பொருட்கள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் விலை உயர்ந்த காரணத்தால், 0.16 சதவீதம் அதிகரித்துள்ளது.

காய்கறிமொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் முறையே, மைனஸ் 1.57 சதவீதம், மைனஸ் 3.37 சதவீதம், மைனஸ் 1.81 சதவீதம், மைனஸ் 0.58 சதவீதம் என இருந்தது.மேலும் கடந்த ஆண்டு, இதே ஆகஸ்ட் மாதத்தில், மொத்தவிலை பணவீக்கம், 1.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது: மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்களின் பணவீக்கம், 3.84 சதவீதமாக இருந்தது. உருளைக்கிழங்கின் விலை, 82.93 சதவீதம் அதிகரித்திருந்தது.காய்கறிகளின் பணவீக்கம், 7.03 சதவீதமாகவும்; வெங்காயத்தின் பணவீக்கம், மைனஸ் 334.48 சதவீதமாகவும் இருந்தன.எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம், 9.68 சதவீதமாக குறைந்துள்ளது.


இதுவே, கடந்த ஜூலை மாதத்தில், 9.84 சதவீதமாக அதிகரித்திருந்தது.தயாரிப்பு பொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த ஜூலையில், 0.51 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில், 1.27 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

நிதிக் கொள்கை

ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் நடைபெற்ற அதன் நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாறுதலையும் செய்யவில்லை. அத்துடன், பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.மேலும், அக்டோபர் முதல், மார்ச் வரையிலான காலத்தில், பணவீக்கம் ஓரளவு மிதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை