இங்கிலாந்திடம் வீழ்ந்தது ஆஸி., | செப்டம்பர் 13, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்திடம் வீழ்ந்தது ஆஸி., | செப்டம்பர் 13, 2020

மான்செஸ்டர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொாண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் (0) ஏமாற்றினார். ஜேசன் ராய் (21) ‘ரன்–அவுட்’ ஆனார். ஜோ ரூட் (39) நம்பிக்கை தந்தார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ ஜாஸ் பட்லர் (3) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் இயான் மார்கன் (42) ஓரளவு கைகொடுத்தார். ஜாம்பா ‘சுழலில்’ சாம் பில்லிங்ஸ் (8) சிக்கினார். கிறிஸ் வோக்ஸ் (26) ஆறுதல் தந்தார். ஸ்டார்க் பந்தில் சாம் கரான் (1) அவுட்டானார்.

பின் இணைந்த டாம் கரான், அடில் ரஷித் ஓரளவு ரன் சேர்த்தனர். ஒன்பதாவது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்த போது மிட்சல் மார்ஷ் பந்தில் டாம் கரான் (37) போல்டானார்.

 

இங்கிலாந்து அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது. ரஷித் (35), ஆர்ச்சர் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

 

ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரில் 207 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. ஹேசல்வுட் (7) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் வோக்ஸ், ஆர்ச்சர், சாம் கரான் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஆர்ச்சர் (இங்கிலாந்து) வென்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என, சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் செப். 16ல் நடக்கிறது.

மூலக்கதை