திடீர் மூச்சு திணறல் பிரச்னை அமித்ஷா மீண்டும் ‘அட்மிட்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
திடீர் மூச்சு திணறல் பிரச்னை அமித்ஷா மீண்டும் ‘அட்மிட்’

புதுடெல்லி: சுவாச பிரச்னையால் அவதியுற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆக.

2ம் தேதி கொரொனா  தொற்று பாதிப்பால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததால் ஆக.

14ம் தேதி டெல்லி முகாம் அலுவலகத்துக்கு திரும்பினார். ஆக.

15ம் தேதி தனது முகாம் அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்றினார். எனினும்,  உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால்,  கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக ஆக.   18ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  

இதையடுத்து, ஆக.

இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து ஓய்வில் இருந்த அமித்ஷாவுக்கு மூச்சு திணறல் பிரச்னைகள் இருந்தன.

அதையடுத்து 2 வாரங்களுக்கு பின் நேற்றிரவு 11 மணியளவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் அமித் ஷாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை