துணை மருத்துவ மாணவர்கள் கல்லூரிக்கு திரும்ப வேண்டும்: மருத்துவகல்வி இயக்குனர் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
துணை மருத்துவ மாணவர்கள் கல்லூரிக்கு திரும்ப வேண்டும்: மருத்துவகல்வி இயக்குனர் எச்சரிக்கை

சென்னை: மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, துணை மருத்துவப் படிப்புகள் இருக்கும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா பரவுவது அதிகரித்து வரும் நிலையிலும், புதிதாக தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நர்சிங், முதலுதவி சிகிச்சை, ரேடியாகிராபி, டையட்டிக்ஸ், பிஸியோ தெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் உடனடியாக தங்கள் கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும்.

துணை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு திரும்புவதை கல்லூரி முதல்வர் மற்றும் துறை தலைவர்கள் உறுதி படுத்தவேண்டும்.

கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் உடனடியாக கல்லூரிகளுக்கு வர மறுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் படிப்பை முடிப்பை  தாமதப்படுத்தப்படுத்துதல் மற்றும் பட்டத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.   கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க, கல்லூரிகளுக்கு திரும்பும் மாணவர்களை உடனடியாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணிகளில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை